Monday, November 24, 2008

பெப்சி கோக்கு மிராண்ட

பெப்சி கோக்கு மிராண்ட
பெரியாஸ்பத்திரி வராண்டா
சொன்ன பேச்ச கேட்கலன்ன சுண்ணாம்பு தாண்டா (2)
..
கோக்கு பானமுன்னு சொன்ன பய யாரடா
·புல் பாட்டிலுமே பூச்சி மருந்து தானடா
பல்லு கரையை நீக்கலாம் கக்கூசு கரையை போக்கலாம்
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)
..
கோக்கு பெப்சியோட தாகம் ரொம்ப பெரிசுடா
அது உருஞ்சும் பானம் ஆறும் குளமடா
பெப்சி உறிஞ்சி வாழுறான்
மச்சி உறிஞ்சி சாகுறான்
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)
..
பெப்சி மாதவனும் விக்கிரமும் யாருடா
ரசிகர் பாக்கெட்டுல மிளைடு போடும் கேடிடா
அவனுக்கு ஏழு கோடிடா
உனக்கு நாம் கோடிடா
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)

Thursday, November 20, 2008

உலகத்தை விடிய வைத்தது நீதானடா

உலகத்தை விடிய வைத்தது நீதானடா
உன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடா
நீயின்றி உலகம் இல்லையே
வானமே உனது எல்லையே
உனக்கென்று ஏதும் இல்லையே....
(உலகத்தை)
..
இடி மின்னல் மழையானாலும்
தளறாது உந்தன் கைகள்
குளிரிலே ரோமங்கள் போல் எழுந்திடும் - மின் கம்பங்கள்
உனது வியர்வை அனையை மீறுமே
உயிர் பெறும் மின்சாரமே
நரம்பில் ஓடும் இரத்தம் போலவே
சிதறிபாயும் பூமியாவுமே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
ஓடிடும் ஆலைக்கெல்லாம் உயிர்மூச்சு - மின்சாரம்
உருவமில்லா உயிருக்கு உன் உதிரமே - ஆதாரம்
கடலுள்ளும் கம்பி படறுதே கையளவாய் உலகம் சுருங்குதே
வலையாகி கைகள் விரியுதே வானையே வெற்றி கொல்லுதே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
நிலக்கரி கருவுலையில் உறங்கிடும் - மின்சாரம்
நெற்றி வியர்வை கொட்டி- கொட்டி எழுப்பிடும் உனது கரம்
உனது உடல் இழையாய் வேகும்
உலகமே பகலாய் மாறும்
உனது விழி ஒரு நொடி மூடும்
உலகமே ஒளியைத் தேடும்
உனக்கென்று ஏதும் இல்லையே
(உலகத்தை)

Tuesday, November 18, 2008

வீர வணக்கம்

கோடான கோடி மக்களுக்காக
குருதி சிந்திய தோழர்களே
வர்க்கப் போராட்ட பாதையிலே.....ஏ.....
வீழந்து புதைந்திட்ட வித்துக்களே
வீரவணக்கங்களே, வீரவணக்கங்களே,
..
சாதிக்கொடுமை பண்ணைக்கொடுமை
தலைவிரித்து ஆடிடும்
தர்மபுரி வடாற்காடு வயல்வெளியும் கிராமமும் - அங்கே
அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்
ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்
ஆல மரங்கள் சாய்ந்தடா....ஆ.........
அழுத கண்கள் சொல்லி மாலாதடா........(2)
..
இருள் என்றால் தைரியமுள்ள எவனுக்கும் பயம்வரும்
எங்கள் இருட்டு பச்சை பெயர் கேட்டால்
எதிரிகளுக்கு ஜீரம் வரும் - அந்த
மலைபோன்ற தோழன் மாண்ட துயரம்
காடு மலைக்கூட கண்ணீர் சிந்திகதரும்
தர்மபுரி மீண்டும் சிவப்பாகும் உண்னை
கொன்றவன் வழக்கன்று தீர்ப்பாகும். (2)
..
துப்பாக்கிகள் வெடித்த போதும் தூங்கி கிடந்த மக்களே
ஒற்றை பறை ஓசைகிளப்பி உணர்வீட்டி எழுப்பினான்
எங்கள் சுப்பாராவ் பானிக்கிரகு தோழன்
இழுக்கும் மூச்சைக்கூட இசையாக்கிய கலைஞன்
மண்ணில் அவரது உடல் மறைந்தாலும்
மக்கள் மூச்சோடு கலந்தானே இசையாய் கலந்தானே - (2)
..
தெலுங்கான பிராந்தியத்தில் செரபண்டராவ் குரல் கேட்டால்
அந்த சிறைச்சுவரும் இடிந்துவிடும் எதிரிகளின் குலைநடுங்கும்
அவன் வாயில் தெறிக்கும் வார்த்தை இடியாகும்
போனாவில் கிழிக்கும் வரிகள் தீயாகும்
மக்கள் யுத்தமே மூச்சென வாழ்ந்தவன்
மக்கள் இதயத்தில் கலந்தானே - (2)
(கோடான)