Saturday, December 13, 2008

அடிமையாகுது நாடே அடிமையாகுது

அடிமையாகுது நாடே அடிமையாகுது - அந்த
அமெரிக்காவ விரட்ட மக்கள் படையாமாறு...(2)

நெல்லு சோளம் கேழ்வரகு அழிச்சது யாரு - நம்ம
நிலம் தரிசா போனதுக்கு காரணம் யாரு...(2)

பத்து வட்டி கொடுக்கிறவன் பகட்டப்பாரு - இப்ப
பத்து ஏக்கர் உழவன் கூட பட்டினிச்சாவு
(குழு - அடிமை))

பசுமை புரட்சி கொண்டுவந்த அன்னியன் யாரு - அவன்
பாலிடால் பாச்ச சொன்னான் தண்ணிக்கு பதிலு (குழு)

ஏந்தி விட்ட ஏணிய எடுத்தவன் யாரு - இப்ப
பூச்சி மருந்து உழவனுக்கு கடைசி சோறு
(குழு - அடிமை)


ஆலைகளுக்கு கடக்கால் எடுத்தது யாரு - அங்கு
ஆர்த்து எழும் எந்திரத்தை இயக்கினதாரு -எங்க
ஊர் தொழிலாளர்களை விரட்டியதாரு
உலகத்தை விழுங்க வரும் கழுகை வெட்டி போட்டிடு கூறு

கோடி கைகல நொடியில் ஒடித்தது யாரு
தரிய குப்பையாக்கி நாடெங்கும் குவிச்சது யாரு - இப்ப
தரியோட ஏக்கம் ஒரு வேலச்சோறு - இனியும்
தாமதிக்காதே வெள்ளை மாளிகை தகரு
(குழு - அடிமை)

உப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணே

உப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணே
இந்த துப்புக்கெட்ட கவர்மெண்ட்டுல
கள்ள சாராய மலிவு தன்னெ - தமிழக
சர்க்காரு புண்ணியத்துல - அந்த

முருங்கை காயைய அண்ண முழம் போட்டு விற்கிறாரு
அந்த வாழத்தண்டு கெட்டகேடு வகுந்து எடப்போட்டு விற்கிறாருங்க
இப்ப காய்கறி எல்லாமே காசுக்காரனுக்கு
கத்தாழ தான் நம்ம மக்களுக்கு - சோத்து
கத்தாழ தான் நம்ம மக்களுக்கு
(உப்பு வெல)
அண்ணே ஒரு ரூபாய் புளிகேட்டா உன்
நாக்க கொஞ்சம் காட்டுங்கிறான்

ஜயா இரண்டு ரூபாய் எண்ணெய் கேட்டா உன்
உள்ளங்கையை நீட்டுங்கிறான்

மல்லி கருவேப்பில்லை கில்லி போட சொன்ன
பல்லக்கடிக்கிறான் படிக்கல்லை தூக்கிறான்

(உப்பு வெல)

Monday, November 24, 2008

பெப்சி கோக்கு மிராண்ட

பெப்சி கோக்கு மிராண்ட
பெரியாஸ்பத்திரி வராண்டா
சொன்ன பேச்ச கேட்கலன்ன சுண்ணாம்பு தாண்டா (2)
..
கோக்கு பானமுன்னு சொன்ன பய யாரடா
·புல் பாட்டிலுமே பூச்சி மருந்து தானடா
பல்லு கரையை நீக்கலாம் கக்கூசு கரையை போக்கலாம்
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)
..
கோக்கு பெப்சியோட தாகம் ரொம்ப பெரிசுடா
அது உருஞ்சும் பானம் ஆறும் குளமடா
பெப்சி உறிஞ்சி வாழுறான்
மச்சி உறிஞ்சி சாகுறான்
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)
..
பெப்சி மாதவனும் விக்கிரமும் யாருடா
ரசிகர் பாக்கெட்டுல மிளைடு போடும் கேடிடா
அவனுக்கு ஏழு கோடிடா
உனக்கு நாம் கோடிடா
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)

Thursday, November 20, 2008

உலகத்தை விடிய வைத்தது நீதானடா

உலகத்தை விடிய வைத்தது நீதானடா
உன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடா
நீயின்றி உலகம் இல்லையே
வானமே உனது எல்லையே
உனக்கென்று ஏதும் இல்லையே....
(உலகத்தை)
..
இடி மின்னல் மழையானாலும்
தளறாது உந்தன் கைகள்
குளிரிலே ரோமங்கள் போல் எழுந்திடும் - மின் கம்பங்கள்
உனது வியர்வை அனையை மீறுமே
உயிர் பெறும் மின்சாரமே
நரம்பில் ஓடும் இரத்தம் போலவே
சிதறிபாயும் பூமியாவுமே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
ஓடிடும் ஆலைக்கெல்லாம் உயிர்மூச்சு - மின்சாரம்
உருவமில்லா உயிருக்கு உன் உதிரமே - ஆதாரம்
கடலுள்ளும் கம்பி படறுதே கையளவாய் உலகம் சுருங்குதே
வலையாகி கைகள் விரியுதே வானையே வெற்றி கொல்லுதே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
நிலக்கரி கருவுலையில் உறங்கிடும் - மின்சாரம்
நெற்றி வியர்வை கொட்டி- கொட்டி எழுப்பிடும் உனது கரம்
உனது உடல் இழையாய் வேகும்
உலகமே பகலாய் மாறும்
உனது விழி ஒரு நொடி மூடும்
உலகமே ஒளியைத் தேடும்
உனக்கென்று ஏதும் இல்லையே
(உலகத்தை)

Tuesday, November 18, 2008

வீர வணக்கம்

கோடான கோடி மக்களுக்காக
குருதி சிந்திய தோழர்களே
வர்க்கப் போராட்ட பாதையிலே.....ஏ.....
வீழந்து புதைந்திட்ட வித்துக்களே
வீரவணக்கங்களே, வீரவணக்கங்களே,
..
சாதிக்கொடுமை பண்ணைக்கொடுமை
தலைவிரித்து ஆடிடும்
தர்மபுரி வடாற்காடு வயல்வெளியும் கிராமமும் - அங்கே
அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்
ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்
ஆல மரங்கள் சாய்ந்தடா....ஆ.........
அழுத கண்கள் சொல்லி மாலாதடா........(2)
..
இருள் என்றால் தைரியமுள்ள எவனுக்கும் பயம்வரும்
எங்கள் இருட்டு பச்சை பெயர் கேட்டால்
எதிரிகளுக்கு ஜீரம் வரும் - அந்த
மலைபோன்ற தோழன் மாண்ட துயரம்
காடு மலைக்கூட கண்ணீர் சிந்திகதரும்
தர்மபுரி மீண்டும் சிவப்பாகும் உண்னை
கொன்றவன் வழக்கன்று தீர்ப்பாகும். (2)
..
துப்பாக்கிகள் வெடித்த போதும் தூங்கி கிடந்த மக்களே
ஒற்றை பறை ஓசைகிளப்பி உணர்வீட்டி எழுப்பினான்
எங்கள் சுப்பாராவ் பானிக்கிரகு தோழன்
இழுக்கும் மூச்சைக்கூட இசையாக்கிய கலைஞன்
மண்ணில் அவரது உடல் மறைந்தாலும்
மக்கள் மூச்சோடு கலந்தானே இசையாய் கலந்தானே - (2)
..
தெலுங்கான பிராந்தியத்தில் செரபண்டராவ் குரல் கேட்டால்
அந்த சிறைச்சுவரும் இடிந்துவிடும் எதிரிகளின் குலைநடுங்கும்
அவன் வாயில் தெறிக்கும் வார்த்தை இடியாகும்
போனாவில் கிழிக்கும் வரிகள் தீயாகும்
மக்கள் யுத்தமே மூச்சென வாழ்ந்தவன்
மக்கள் இதயத்தில் கலந்தானே - (2)
(கோடான)

Friday, May 30, 2008

நீ இந்து என்றால் சொல் சம்மதமா

சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !

நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா!

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !
என் கண்ணிரும் ஒயவில்லை
நெஞ்சை அறுக்கும் சோகமடா !
அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !

கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !

குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே

சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கங்கை சுமந்து மீன்களையா
தலை துண்டாய் போன உடல்களையா !
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !

கண்கள் அவிந்த பகல்பூரே
உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !
தோட்டத்தின் மேலே பூக்களடா !

தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !
தூர்களின் வேரோ செந்நிறமா !

ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
துர‌த்தி வந்தது கும்பல் ஒன்று
ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !

தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா !
அடைக்கலம் தந்த கைகள் அல்ல
அது ஆட்காட்டிகளின் கைகளடா !

துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா

கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
துரோகிகள் மதம்தான் உன் மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
இல்லை கண்டும் காணாத கல்லினமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.

அண்ணன் வர்றாரு

அண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க
ஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க - ஏ
மக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாரு
தண்டல் எடுத்து வையுங்க
எதுக்கும் துண்டை எடுத்து குடுங்க
பப்பள பளபள பட்டு சலவ சட்டை
ஆகா பட்டு சலவ சட்டை
தொண்டையில் உத்திராட்ச கொட்ட
ஒரு உத்திராட்ச கொட்ட
அவன் நெத்தியில் குங்குமம் சந்தனம்
மல்ட்டிகலர் பட்டை
மயங்கி போகாதிங்க கிட்ட
தளபதி பாட்ஷா நாயகனெல்லாம்
அண்ணே வரலாறுதான்
ஹிரோ அண்ணனோட நிழல்தான்
அதில் டூயட் கனவு பாதி சீன தூக்கினா
பாதி கத நெசந்தான்
அத பாக்குறோம் தினம் தினம் தான்
கள்ளுமுள்ளுகூட பொதருகுள்ள ஓடிக்கிட்டிருந்தாரு
சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு
அண்ணன் ஓட்டிக்கிட்டிருந்தாரு சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு
அப்படி ஜில்லா ஊருகுள்ள கடைய தொறந்தாரு
பட்ட கரையில் நொழஞ்சாரு
கல்யாண காதுகுத்து கோயில் திருவிழா எதுவும் நடக்காது
அண்ணன் இல்லன்னா எதுவும் நடக்காது
ஒரு அடிதடி கலாட்டா வெட்டுகுத்து கலவரம் தொடங்காது
அண்ணன் இல்லாமா பொணமே விழுவாது
தரக்கடை, பழக்கடை தட்டுவண்டி சங்கம் அண்ணந்தான் தலைவரு
நம்ம அண்ணந்தான் தலைவரு
தண்டலுக்கும் அண்ணன் தான் டெண்டரு
சாதி சங்கத்தில் தலைவரு
ஆக்கப்பட்ட அனைத்துக்கும் தலைவரு
அட அப்புறந்தாண்டா அண்ணன் புதுசா காரு எறக்குனாரு
வெள்ளை கண்டஸா எறக்குனாரு
காரில் போகையில் கண்ணாடி வழியே
குடிசையே பாத்தாருஅண்ணன் குடிசைய பாத்தாரு
மனக்கணகொன்னு போட்டாரு
பிளாட்டு மனக்கணக் கொன்னு போட்டாரு
ஏ மலையப் பாத்தாரு கிரானையிட்டு விலைய நினைச்சாரு
காவேரி மணலப்பாத்தாரு கரையோர மரத்தையும் பாத்தாரு
அட இது தெரியலையே இத்தனை நாளுன்னு
முடிவொன்னு எடுத்தாரு, வேட்பு மனுவ கொடுத்தாரு
போட்டிக்கி நின்ன கட்சிகாரன்கிட்ட துண்டு வீசினாரு
எலும்பு துண்டு வீசினாரு, ரெண்டு குண்டும் வீசினாரு
அட அப்புறந்தாண்டா கட்சியில் அண்ணன் தளபதி ஆனாரு
ஊரல பாதிய தின்னாரு
சரக்கு ஓட்டுன காலத்தில்
அண்ணன் சாதாரண கேடி
இப்ப இருக்குது பல கோடி
கலக்டரு வாரார் வூடு தேடி
தண்ணி போட நிதிபதி ஜோடி
போலிசு அணைச்சி போட்ட பீடி
இந்த தீடீர் பணக்காரன் அரசியல் ரெளடி வாரான் நம்ம தேடி
தேர்தல் தேதி வருகுது கூடி
தேர்தல் தேதி வருகுது கூடி
....

காலங்கள் மாறும்

காலங்கள் மாறும் கரங்களொன்று சேரும் (2)

மழைக் காளான்கள் போல் தேர்தல் மாயங்கள் சாகும்
இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்

(காலங்கள் மாறும்)

கோரஸ்:
நாணல்கள் போலே வளைந்த நாட்கள் போதும்
ஓநாய்கள் பின்னே நடந்து என்ன இலாபம்
தேர்தல்கள் போகும் ஏமாற்றம் நெஞ்சில் தேங்கும்
வேறன்ன மார்க்கம் விளாக்கள் நெஞ்சை தாக்கும்
உடல் நோகாமல் சாகாமல் வராது மாற்றம்
இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்

(காலங்கள் மாறும்)


கோரஸ்:
அதிகாரம் இன்று இல்லை அடையாமல் வாழ்க்கை இல்லை
புது வாழ்க்கை நீதி பண்பாடு வாக்கு சீட்டாலே மாற்றம் வராது
மணல் கோபுரம் போல் பணநாயகம் வீழும்
இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்

(காலங்கள் மாறும்)

நாடு முன்னேறுதுங்கிறான்

நாடு முன்னேறுதுங்கிறான் - அட
மினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்கா
ஜெர்மன் அமெரிக்கா
ஜப்பான் கணக்கா நாடு முன்னேறுதுங்கிறான்


(நாடு முன்னேறுதுங்கிறான்)


தாகம் தீர கொக்கோ கோலா
போதை ஏற ·பாரீன் சீசா
மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு
மிச்ச வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு
குடிக்கத் தண்ணியில்ல கொப்புளிக்க பன்னீரு
அட்ரா செருப்பால வீங்கிபுடும் செவிளு


(நாடு முன்னேறுதுங்கிறான்)

டிவியில் சிரிக்குது காம்பளான் கேலு - டாக்டர்
தெனந்தரச் சொல்லுறான் பழம் முட்ட பாலு
வகை தெரியாம தின்னு அவன் புள்ள வீங்குது - வெறும்
விளம்பரத்த பாத்தே நம்ப புள்ள ஏங்குது
சத்துணவு தீந்திடுன்னு தட்டோட ஓடுது - இவன்
தட்டுக்கெட்ட திட்டமெல்லாம் என்னா புடுங்குது


(நாடு முன்னேறுதுங்கிறான்)

காலைக் காப்பிக்கு மீனம்பாக்கம்
கக்கூசுக்கு போறான் லண்டன் மாநகரம்
ஈசலாட்டம் தனியார் விமானம்
இதுக்கே போலிசு துணை ஒண்ணு வேணும்
பேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணும் - பெரிசா
பேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்


(நாடு முன்னேறுதுங்கிறான்)
பள்ளிக் கூடமுன்னு போர்டு தொங்குது
பாத்தா மூணு சொவருதான் நிக்குது
பசங்களெல்லாம் மரத்தில தொங்குது
பாடம் நடத்துற டீச்சரு தூங்குது
காசுக்காரன் புள்ள கான்வெண்டு போகுது - நம்ப
கார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது


(நாடு முன்னேறுதுங்கிறான்)

அரசு மருத்துவ மனைங்க இருக்குது
ஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது
ஆப்பரேசனின்னு வச்சிருக்கான் பேரு
அறுத்து போட்டுபுட்டு இல்லேங்கிறான் நூலு
காசுக்காரக் கூட்டம் அப்போலோ போகுது - நமக்கு
கவருமெண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது


(நாடு முன்னேறுதுங்கிறான்)
ஏ.சி கூண்டுக்குள்ள மொம்மை வெரைக்குது - தங்க
ஊசிச் சேலை அதன் ஒடம்பில் மினுக்குது
நல்லி சாரதாஸ் கல்லா பிதுங்குது
வெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது
பருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது - எங்க
பட்டினிச் சாவில் உன் பட்டு மினுக்குது


(நாடு முன்னேறுதுங்கிறான்)
காடும் மரமும் கடல் மீனும் தனியாரு
ரோடு கரண்டு டெலி போனும் தனியாரு - அரசு
ஆலைகள் அம்புட்டையும் கட்டிப்புட்டான்கூறு - அத
ஏலம் மூணுதரன்னு கூவுறான் சர்க்காரு - நம்ம
நாடுன்னு சொல்லிக்கிட மிச்சமென்ன கூறு - இவன்
ஆடுகிறான் ஆட்டுறவன் காட்டு தர்பாரு


(நாடு முன்னேறுதுங்கிறான்)

கஞ்சி ஊத்த வக்கில்ல

கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கவர்மெண்டு
நாட்டைக் கொண்டு போயி வித்துப்புட்டு
என்னடா பார்லிமெண்டு
ஓட்டெதுக்கு........................... சீட்டெதுக்கு
ஓடுங்கடா..........................நாட்டவுட்டு

இந்த - ஒரு சாண் வயித்துக்குத்தான் இம்புட்டு பாடு
வயித்தல நெருப்பக் கொட்டிப்புட்டான் பாரு - நாங்க
ஒக்கார வச்சி சோறு போடச் சொல்லி கேட்டமா
ஓசியில உப்புபுளி மொளகாதான் கேட்டமா - ஏண்டா
சிக்காத புதிராடா வெலவாசி உயர்வு நீ
ஒக்காந்து திங்கிறவன் ஒனக்கென்ன நோவு

(கஞ்சி ஊத்த வக்கில்ல)


கருவக் காடெல்லாம் கட்டடமா போச்சு
வெளிய போறதே பெரும்பாடா ஆச்சு
ஒண்ணுக்குப் போகக் கூட இருட்டணும் பொழுது
பொம்பளைங்க பாடு பொறந்ததே தவறு
கட்டணக் கழிப்பிடம்னு பஸ்டாண்டில இருக்கு
காலுகழுவ ஒரு கல்லு தாண்டா கெடக்கு
நகராட்சி வளந்து மாநகராட்சி
நாலணா வளந்து ஒரு ரூபா ஆச்சு - அட
கக்கூசுக்கும் கூடவா வெலவாசி உயர்வு - அதுக்கும்
காட்டு ஒப்பந்தத்தில் கண்டிசனா இருக்கு

(கஞ்சி ஊத்த வக்கில்ல)

எம்ப்ளாய்மெண்டு ஆபிசின்னு ஊருக்கூரு இருக்கு
அத - நம்பினவன் கழுத்துக்கு நிச்சயமா சுருக்கு
சுவரெல்லாம் தொங்குதடா சுயவேல வாய்ப்பு
கவர்மெண்டு வேலைக்கு வச்சிப்புட்டான் ஆப்பு
ஆட்ட மாட்ட வித்துத்தாவே காலேசு படிச்சோம் - இப்போ
வாத்து வளக்கவாடா எம்ப்ளாய்மெண்டில் பதிஞ்சோம்
அட - பள்ளிக்கு எதுக்குடா தங்கத்தில மூக்குத்தி - வெறும்
பம்மாத்து எதுக்குடா தள்ளுங்கடா இடிச்சி

(கஞ்சி ஊத்த வக்கில்ல)

ரேசன் கடையின்னு வச்சிருக்கான் பேரு - இந்த
தேசத்தின் பெருமையை அங்க வந்து பாரு - இப்போ
கவர்மெண்டு சீமெண்ணெய்க்கு அடிச்சிட்டான் கலரு
கறுப்பு மார்க்கெட்டுக்கு கொடுத்திட்டான் பவரு
புழுங்கலு குருணை பச்சரிசி நொய்யி -ஒங்க
புழுத்த அரிசி வாங்க ஏழுட்டு பையி
ரேசன் கடையின்னு சொல்லாதடா பொய்
கோதுமை பாமாயில கொண்டு வந்து வய்யி
பாதிய முழுங்குற படிக்கல்லு தூங்குது - செஞ்ச
பாலத்துக்கு தண்டனையா தெராசு தொங்குது - கடை
மீதியையும் மூடுடானு அமெரிக்கா நோண்டுது - நம்ம
புரட்சித் தலைவி ஆட்சி பூட்டைக் காட்டுது

(கஞ்சி ஊத்த வக்கில்ல)

சோறு போட வக்கில்லாத ராசா மகராசா - இத
சொர்க்கமின்னு சொல்லுறானே கேக்குறவன் லூசா
வேலதர வக்கில்லாத ராசா மக....ராசா
ஊர மேய்க்க ஆசைப்பட்டா அது என்ன லேசா
நடக்கப் படிக்கத் தண்ணி குடிக்கவும் காசா
நாயி கணக்கா வரி புடுங்கத்தான் அரசா
சொடக்கு போடுறான் அமெரிக்கா லேசா - சும்மா
சொழண்டு ஆடுறான் இவன் சுதந்திர அரசா - நாம
குனியக் குனிய இவன் குட்டுறது புதுசா - மக்கள்
இணைய இணைய திரை விலகிடும் முழுசா

(கஞ்சி ஊத்த வக்கில்ல)

ஓட்டுப்போடாதே! புரட்சி செய்!

ஓட்டுப்போடாதே போடாதே புரட்சி செய்
பொய் வாக்கை நம்பாதே கிளர்ச்சி செய்
போராடு இன்றே மாற்றம் வராது தன்னாலே


(ஓட்டுப்போடாதே போடாதே)

கோரஸ்:
சாதி இல்லாமல் முடிந்த தேர்தல் ஏது
நடுவீதி சிலையாலே சாவுகள் எத்தனை நூறு
தீர்ந்ததா கூறு அதை தீர்க்கின்ற பாதை வேறு


(ஓட்டுப்போடாதே போடாதே)

கோரஸ்:
உழவன் கண்னீரை சொல்லாத தேர்தல் உண்டா
அவன் உரிமை கேட்டதுமே கொல்லாத ஆட்சி உண்டா
விளையாத பூமி
தேர்தல் விளையாத பூமி வாக்கை விதைக்காதே நம்பி நம்பி


(ஓட்டுப்போடாதே போடாதே)

கோரஸ்:
பச்சை வயல்வெளியை விண்முட்ட நிற்கும் மலைதொடரை
குப்பை கூளம்போல் விற்பதோ பிச்சை காசுக்கு
தேசத்தை விற்கும்
நம் தேசத்தை விற்கும் இந்த தேர்தல் ஏமாற்று மாற்று


(ஓட்டுப்போடாதே போடாதே)

கோரஸ்:
நீதிமன்றங்கள் போலிசு கூட்டம் யாருக்கு
விடை தேடு கேள்விக்கு தேர்தல் ஒரு மாய பல்லக்கு
போடாதே ஓட்டு போதும் போதும் உன் திசையை மாற்று

ஓட்டுப்போடாதே போடாதே புரட்சி செய்
பொய் வாக்கை நம்பாதே கிளர்ச்சி செய்
போராடு இன்றே மாற்றம் வராது தன்னாலே


(ஓட்டுப்போடாதே போடாதே)

Thursday, May 29, 2008

மறையாது மடியாது நக்சல்பரி

ஏ.... தன்னே தானனனன்னே....
தனதன்னானே தன்னன்னே...
தானேனன்னே
நக்சல்பரி நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி

மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி

கோரஸ்:
உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி
திமிரில் கொளுத்த சுரண்டலின் மார்பை
இடியாய் பிளந்ததே நக்சல்பரி
மக்கள் இசையாகப் பிறந்ததே நக்சல்பரி
நக்சல்பரி....

மிட்டா மிராசுகளின் கொட்டம் அடக்கி
அவன் பட்டாக்களை பிடுங்கி நெருப்பில் எரித்து
பறை தட்டி உழவர் படை கட்டி இந்த
பாரெங்கும் பண்ணைகள் மடிகிற வரையில்

(மறையாது மடியாது ...)

கோரஸ்:

அன்னியன் ஆணைக்கு ஆடும் அரசாங்கம்
மண்டியிடும் தரகர்க்கு நாற்காலி மோகம்
அடிமைக்கு எதற்கு சுதந்திர மோகம்
அலையால் எழுந்ததே நக்சல்பரி
அதிகாரம் களைந்ததே நக்சல்பரி
நக்சல்பரி....

வங்கம் அரபிக் கடலெங்கும் அலை விரித்து
புவி எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு
இனம் கண்டு போரில் எதிர்கொண்டு
அடி வேரோடு சாரோடு பிடிங்கிடும் வரையில்....

(மறையாது மடியாது ....)

கோரஸ்:

அரசாளும் வர்க்கத்தை திரைபோடும் மன்றம்
நாடாளுமன்றம்
புதுநீதி எனும் பெயரில் சதி செய்யும் மன்றம்
அது நீதிமன்றம்
வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை
எதிர்கொண்டு நின்றதே நக்சல்பரி
மக்கள் இதயத்தை வென்றதே நக்சல்பரி
நக்சல்பரி....

கோரஸ்:

எங்கே நீதி என்று ஏங்கும் நிலைமுடிக்க
இதோ இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க
அட எங்கே மக்கள் படை அங்கே
அது முன்னேறும் முன்னேறும் முடிகின்ற வரையில்

(மறையாது மடியாது ....)

தோழர் பகத்சிங்கே

தாய் நாட்டின் மானங்காக்க
தூக்குக் கயிற்றை துணிந்தே முத்தமிட்ட
பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே .....

அந்த வீரன் இன்னும் சாகவில்லை - அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை

அண்ணல் காந்தியின் அகிம்சை பாதையிலே - வீரத்தை
அடகுவைத்து மண்டியிட்ட நேரத்திலே - வெள்ளையாதிக்க
இருள் தன்னை கிழித்திடவே வானில்
விடி வெள்ளிகள் மூன்று உதித்தனவே -
(அந்த)

பரங்கியர் போட்டு வந்த ஆட்டமெல்லாம் - அது
பாராளுமன்றத்துக்கு கேட்கலையாம் - அந்த
செவிடர்களின் செவிகளுக்கு உறைத்திடவே - கை
எறிகுண்டை வீசியெறிந்த தோழர்களே
(அந்த)
ஜாலியன் வாலாபாக்கில் மக்களையே - வெள்ளை
வெறி நாயாம் ஜெனரல் டயர் சுட்டானெ - அந்த
கொடுமைகளுக்கெதிராக குரல் எழுப்பி - தூக்குக்
கயிற்றுக்கு இரையான தியாகிகளே -
(அந்த)
சினிமா சூதாட்ட போதையிலே - சிக்கி
சீரழியும் எனதருமை இளைஞர்களே - அந்த
தியாகச்சுடர் பகத்சிங்கின் பெயராலே - அணி
திரண்டிடுவோம் கொடுமைகளை அழித்திடவே.