Thursday, May 29, 2008

மறையாது மடியாது நக்சல்பரி

ஏ.... தன்னே தானனனன்னே....
தனதன்னானே தன்னன்னே...
தானேனன்னே
நக்சல்பரி நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி

மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி

கோரஸ்:
உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி
திமிரில் கொளுத்த சுரண்டலின் மார்பை
இடியாய் பிளந்ததே நக்சல்பரி
மக்கள் இசையாகப் பிறந்ததே நக்சல்பரி
நக்சல்பரி....

மிட்டா மிராசுகளின் கொட்டம் அடக்கி
அவன் பட்டாக்களை பிடுங்கி நெருப்பில் எரித்து
பறை தட்டி உழவர் படை கட்டி இந்த
பாரெங்கும் பண்ணைகள் மடிகிற வரையில்

(மறையாது மடியாது ...)

கோரஸ்:

அன்னியன் ஆணைக்கு ஆடும் அரசாங்கம்
மண்டியிடும் தரகர்க்கு நாற்காலி மோகம்
அடிமைக்கு எதற்கு சுதந்திர மோகம்
அலையால் எழுந்ததே நக்சல்பரி
அதிகாரம் களைந்ததே நக்சல்பரி
நக்சல்பரி....

வங்கம் அரபிக் கடலெங்கும் அலை விரித்து
புவி எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு
இனம் கண்டு போரில் எதிர்கொண்டு
அடி வேரோடு சாரோடு பிடிங்கிடும் வரையில்....

(மறையாது மடியாது ....)

கோரஸ்:

அரசாளும் வர்க்கத்தை திரைபோடும் மன்றம்
நாடாளுமன்றம்
புதுநீதி எனும் பெயரில் சதி செய்யும் மன்றம்
அது நீதிமன்றம்
வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை
எதிர்கொண்டு நின்றதே நக்சல்பரி
மக்கள் இதயத்தை வென்றதே நக்சல்பரி
நக்சல்பரி....

கோரஸ்:

எங்கே நீதி என்று ஏங்கும் நிலைமுடிக்க
இதோ இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க
அட எங்கே மக்கள் படை அங்கே
அது முன்னேறும் முன்னேறும் முடிகின்ற வரையில்

(மறையாது மடியாது ....)

1 comment:

அசுரன் said...

ம க இ க பாடல்களின் எழுத்து வடிவை பதிவேற்றுவது சிறப்பானதோரு முயற்சி. வாழ்த்துக்கள். பல நேரங்களில் கட்டுரைகளுக்கு பொருத்தமான பாடல்களின் வரிகள் ஞாபகம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளோம், இனி அப்படியிருக்காது. இத்துடன் ம க இ க பாடல்களின் ஒலி வடிவத்துக்கான லிங்குகளையும் இணைத்தால் சிறப்பாக இருக்கும். லிங்குகள் தமிழ்சர்க்கிள் தளத்தில் இருக்கின்றன. அனைத்து ம க இ க பாடல்களும் அங்கு உள்ளன.

தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.


புரட்சிகர வாழ்த்துக்கள்,
அசுரன்